Monday 9 June 2014

பழைய பாலிசியைப் புதுப்பிக்க முடியுமா ?



ரெகுலர் பிரீமியம் செலுத்தும் பாலிசிக்கு, கெடு தேதியின் 30 நாட்களுக்குள் பிரீமியம் செலுத்தப்பட வேண்டும் (மாதாந்திர முறைக்கு 15 நாட்கள்). நீங்கள் பிரீமியத்தைச் செலுத்தி, பாலிசியை செயல்பாட்டில் வைத்திருக்க காப்பீட்டு நிறுவனம் சலுகை காலத்தை வழங்குகிறது. சலுகை காலத்திற்குள் பிரீமியத்தை செலுத்தவில்லையென்றால், பாலிசி முடிந்ததாகக் கருதப்படுகிறது.

முடிந்த பாலிசிகளைப் புதுப்பிக்கும் செயலை எளிதாக்கக்கூடிய, பல்வேறு திட்டங்களை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன -

பிரீமியத்தின் அனைத்து நிலுவைகளையும், அந்த காலத்திற்கான வட்டியையும் செலுத்தினால் பாலிசியைப் புதுப்பிக்கலாம். குறிப்பிட்ட பாலிசிகளில், ரெகுலர் பிரீமியத்துடன் சேர்த்து நிலுவையின் ஒரு பகுதியை செலுத்தும் புதுப்பிப்பு தவணை திட்டத்தை நிறுவனம் வழங்குகிறது, மீதமுள்ள புதுப்பித்தல் தொகையை இரண்டு வருடங்களில் செலுத்த வேண்டும்.

மற்றொரு திட்டத்தில், வட்டியுடன் பிரீமியத்தைச் செலுத்த, பாலிசியில் உள்ள பலனைப் பயன்படுத்தி (ரெகுலர் இடைவெளியில் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பெறக்கூடிய பணம்) மணி பேக் பாலிசியைப் புதுப்பிக்க முடியும். (புதுப்பிப்பு மதிப்பைவிட சர்வைவல் பெனிஃபிட் தொகை குறைவாக இருந்தால், மீதமுள்ள தொகையைச் செலுத்த வேண்டும், அதிகமாக இருந்தால், உபரித் தொகையைப் பெறுவீர்கள்.)

No comments:

Post a Comment