Monday 9 June 2014

பருவ கால ஆயுள் காப்பீடு ஏன்?



ஆயுள் காப்பீடு 

  • நம் வாழ்க்கையில் ஆயுள் காப்பீடு என்பது அவசியமான ஒன்றாக உள்ளது.  நம்முடைய நிதி திட்டமிடுதலில் காப்பீடு முக்கியமானதாக உள்ளது. நம்முடைய இறப்பிற்கு பிறகு நம்மை சார்ந்தவர்களுக்கு நிதி சுமை இல்லாமல் இருப்பதற்கு ஆயுள் காப்பீடு அத்தியாவச ஒன்றாக உள்ளது. இந்த ஆயுள் காப்பீடு மொத்தத்தில் ஒரு சொத்தின் வளர்ச்சியாக உள்ளது.
  • ஆயுள் காப்பீடு நம்முடைய குடும்பதாரர்களுக்கு நிதி சார்ந்த செலவுகளில் இருந்து தீர்வு அளிப்பதோடு, நமக்கு பாதுகாப்பை அளிக்கிறது.
  • எல்லா ஆயுள் காப்பீட்டு பாலிசிகளும், பருவ கால ஆயுள் காப்பீடு அல்லது நிரந்தரமான ஆயுள் காப்பீட்டின் கீழ் உள்ளது.
  • பருவ கால ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்,Term policy ஒரு குறிப்பிட்ட கால காப்புறுதியில் முடிவடைகிறது. ஆனால் நிரந்தரமான ஆயுள் காப்பீடு, நம் வாழ் நாள் முழுவதற்கு காப்புறுதி அளிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த இரண்டு காப்பீட்டு பாலிசிகளுக்கு பிரீமியம் கட்டாயம் செலுத்தியாக வேண்டும்.

பருவ கால ஆயுள் காப்பீடு ஏன்? Term policy

  • பருவ கால ஆயுள் காப்பீடு, ஆயுள் காப்பீட்டிற்கு முதன்மையாக திகழ்கிறது.
  • இந்த பருவ கால ஆயுள் காப்பீடு, சுலபமானதாகவும், நம்மால் ஏற்றக்கொள்ள கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பருவ கால ஆயுள் காப்பீடு, நம் வாழ்நாளுக்கு தேவையான காப்புறுதி மட்டுமே கொடுக்கிறது. ஆனால் ரொக்க மதிப்பை பெருக்குவதில்லை.
  • நிரந்தர ஆயுள் காப்பீட்டை காட்டிலும் பருவ கால ஆயுள் காப்பீடு குறைந்த பிரீமியத்தை கொண்டதாக உள்ளது.
  • தற்சமயம், நிறைய காப்பீட்டு நிறுவனங்கள், பருவ கால ஆயுள் காப்பீட்டிலிருந்து, நிரந்தர காப்பீட்டு பாலிசிகளுக்கு மாற்றி கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளன.
பருவ கால ஆயுள் காப்பீடுகள் உத்திரவாத தரத்தை அளிக்கின்றன

No comments:

Post a Comment