Monday, 9 June 2014

பிரீமியத்தைச் செலுத்தி, பாலிசியை செயல்பாட்டில் வைத்திருக்க


நான் சில காலம் பிரீமியத்தைச் செலுத்தவில்லை. எனது பாலிசியைத் தொடர விரும்பவில்லை. காப்பீட்டு நிறுவனத்திலிருந்து எதையும் பெற முடியுமா?

நீங்கள் பிரீமியத்தைச் செலுத்தி, பாலிசியை செயல்பாட்டில் வைத்திருக்க, காப்பீட்டு நிறுவனம் சலுகை காலத்தை வழங்குகிறது. ரெகுலர் பிரீமியம் செலுத்தும் பாலிசிக்கு, கெடு தேதியின் 30 நாட்களுக்குள் பிரீமியம் செலுத்தப்பட வேண்டும் (மாதாந்திர முறைக்கு 15 நாட்கள்).
 
பாலிசி வாங்கியதிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிரீமியத்தைச் செலுத்தவில்லையென்றால், காப்பீட்டு நிறுவனத்திலிருந்து எந்தப் பணத்தையும் திரும்பப்பெற முடியாது
தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக நீங்கள் பிரீமியத்தை செலுத்தியிருந்தால், பிரீமிய கட்டண எண்ணிக்கை மற்றும் பாலிசி காலவரையின் திட்டமிட்ட தொகை, சேர்ந்துள்ள போனஸைப் பொறுத்து; பிரீமிய கட்டணத்தின் விகிதத்தைப் பெறுவீர்கள் (பெறக்கூடிய தொகை சரண்டர் மதிப்பாக அறியப்படுகிறது.)
 
இருப்பினும், நிறுவனம் மற்றும் பாலிசிக்கு ஏற்ப சரண்டர் மதிப்பு மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
 
சரண்டர் மதிப்பு பின்வருவனவற்றைச் சார்ந்துள்ளது
  - பாலிசி வகை
  - பிரீமியத் தொகை
  - பாலிசி காலவரை
  - பிரீமியம் செலுத்தப்பட்ட ஆண்டுகளின் எண்ணிக்கை
  - சேர்ந்துள்ள போனஸ், ஏதும் இருந்தால்.
 

No comments:

Post a Comment