எவ்வாறு ஆயுள் காப்பீட்டுப் பாலிசியைப் புரிந்துகொள்வது?
ஆயுள் காப்பீட்டு பாலிசியைப் புரிந்துகொள்ள கீழ்கண்ட தொடர்கள் பற்றி தெரிந்துகொள்வது இன்றியமையாதது:
பிரீமியம் - உங்கள் காப்பீட்டுப் பாதுகாப்பைத் தொடர நீங்கள் செலுத்த வேண்டிய தொகை.
பிரீமியத் தொகை பின்வருவனவற்றைச் சார்ந்துள்ளது
• உங்கள் வயது
• தேர்ந்தெடுத்த பாலிசி
• பிரீமியம் செலுத்தும் முறை
• பிரீமியம் செலுத்தும் காலவரை
• பாலிசி காலவரை
மாதம் ஒருமுறை (உங்கள் ஊதியத்திலிருந்து கழிக்கப்பட்டதாக), காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என்ற பிரீமியத்தைச் செலுத்தும் முறையைத் தேர்வுசெய்யலாம். எனினும், ஒருமுறை மட்டுமே செலுத்தும், சிங்கிள் பிரீமியம் பாலிசிகளும் உள்ளன (எனவே நீங்கள் பிரீமியத்தைத் தொடர்ச்சியாக செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது).
காலவரை - காப்பீடு எடுக்க நீங்கள் தேர்வு செய்யும் ஆண்டுகளின் எண்ணிக்கை.
நீண்ட காலவரைக்கு பிரீமியம் குறைவாக இருக்கும். பாலிசி காலவரை ஒரு ஆண்டிலிருந்து அதிகபட்சம் 55 ஆண்டுகள் வரை வேறுபடும். காலவரையின் வரம்பை அனைத்துப் பாலிசிகளும் அளிப்பதில்லை.
பிரீமியம் செலுத்தும் காலவரை - உங்கள் பாலிசிக்கு நீங்கள் செலுத்தும் பிரீமியம் ஆண்டுகளின் எண்ணிக்கை.
நீண்டகால பிரீமியம் செலுத்தும் காலவரைக்கு பிரீமியம் குறைவாக இருக்கும். வழக்கமாக பிரீமியம் செலுத்தும் காலவரை, பாலிசி காலவரை போன்றே இருக்கும். எனினும், பாலிசி காலவரையைக் காட்டிலும் குறைவாக இருக்கும் பிரீமியம் செலுத்தும் காலவரையைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை சில பாலிசிகள் உங்களுக்கு அளிக்கின்றன.
திட்டத் தொகை / ஃபேஸ் வேல்யூ - நீங்கள் பெற்ற காப்பீட்டுப் பாதுகாப்புத் தொகை அல்லது உங்கள் மரணத்தின்போது உங்கள் குடும்பம் பெறுகிற குறைந்தபட்ச தொகை.
பாலிசி வகை அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த ரைடர்ஸின் அடிப்படையில் இந்தத் தொகையைக் காட்டிலும் அதிகமாக உங்கள் குடும்பம் பெற முடியும்.
போனஸ் / லாபத்தில் பங்கெடுத்தல் - திட்டத் தொகையின் வீதமாக ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டு நிறுவனத்தால் அறிவிக்கப்படுகிறது. இந்தத் தொகை வேறுபடும்; வேறுபட்ட பாலிசிகள் மற்றும் காலவரைக்கு ஏற்ப அது வேறுபடும்.
ஒவ்வொரு வருடமும் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மொத்தப் பணமாகச் செலுத்தும் போனஸானது, முதிர்விற்குப் பிறகு காப்பீடு எடுத்த நபருக்கோ அல்லது இறப்பிற்குப் பிறகு அவருடைய குடும்பத்திற்கோ திட்டத் தொகைக்குக் கூடுதலாக வழங்கப்படுகிறது.
எதிர்கால செயல்திறன் பற்றிய காப்பீட்டு நிறுவனத்தின் யூகங்களின் அடிப்படையில் போனஸ் உள்ளது. பிற எந்த யூகத்தைப் போன்று, உண்மையான முடிவுகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். நீண்டகாலத் திட்டங்களுக்கு கணிக்கப்பட்ட மதிப்புகளிலிருந்து வேறுபடும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு பாலிசிக்கும் போனஸ் தொகை பற்றிய உத்தரவாதத்தை அனைத்து நிறுவனங்களும் அளிப்பதில்லை.
கூடுதல் உத்தரவாதம் - காப்பீட்டு நிறுவனத்தால் அறிவிக்கப்படுகிறது; நிறுவனத்தின் நிதிசார்ந்த முடிவுகள் சார்ந்து அமையாது, காப்பீடு எடுத்தவருக்கோ அல்லது நியமனதாரருக்கோ பணத்தின் உத்தரவாதத் தொகையை நிறுவனம் கொடுக்கும்.
போனஸ் தொகையைப் போன்று, முதிர்விற்குப் பிறகு காப்பீடு எடுத்த நபருக்கோ அல்லது இறப்பிற்குப் பிறகு அவருடைய குடும்பத்திற்கோ திட்டத் தொகைக்குக் கூடுதலாகவோ இது வழங்கப்படுகிறது.
சர்வைவல் பலன் - பாலிசி காலவரையை முழுமையாக முடிக்கும் நிலையில், காப்பீடு எடுத்த நபர் தொடர்ச்சியான இடைவெளிகளில், முன்பே உறுதிசெய்து பெறும் தொகை.
அடிக்கடி, முதிர்வு அல்லது பாலிசி காலவரை முடிவில் பெறும் பணம் சர்வைவல் பலன் என்று குறிப்பிடப்படுகிறது.
முதிர்வு பலன் - பாலிசி காலத்தை முழுமையாக முடிக்கும் நிலையில், காப்பீடு எடுத்தவர் பெறக்கூடிய தொகை.
பாலிசிகள் போனஸை வழங்கினால், பாலிசி காலவரைக்கான போனஸுடன் திட்டத் தொகையையும் சேர்த்து காப்பீடு எடுத்தவருக்கு முதிர்வின் போது வழங்கப்படும். கூடுதலாக, சில பாலிசிகள் ஊக்கத் தொகையை வழங்குகிறது, அவை பாலிசி காலவரையை அடிப்படையாகக் கொண்ட திட்டத் தொகையின் ஒரு பகுதியாகும்.
பாலிசிகள் போனஸை வழங்கவில்லையென்றால், முதிர்வின் போது, திட்டத் தொகை அல்லது பிரீமியத்தை திரும்ப பெறுவது போன்ற எதுவும் காப்பீடு எடுத்தவருக்கு கிடைக்காது (தேர்வு செய்த பாலிசி வகையைப் பொறுத்தது).
காப்பு அல்லது இறப்பு பலன் - காப்பீடு எடுத்தவர் இறக்கும்போது, நியமனதாரர் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பெறும் பணம். திட்டத் தொகையுடன் போனஸ் (ஏதும் இருந்தால்) பெறுவார்.
விபத்து இறப்பு பலன் அல்லது கூடுதல் திட்டத் தொகை போன்ற ரைடர்களை கூடுதலாகத் தேர்வு செய்திருந்தால், நியமனதாரர் அதிக பணத்தைப் பெறுவார்.
வருவாய்கள் அல்லது வரிக்கு முந்தைய ஈட்டுத்தொகைகள் - கூடுதல் அடிப்படையில் பிரீமியத்தில் சம்பாதித்த வட்டி, வரிக்கு முந்தைய ஈட்டுத்தொகையாக உள்ளது.
வரிக்குப் பிந்தைய ஈட்டுத்தொகை-ஆயுள் காப்பீட்டுப் பாலிசிக்குச் செலுத்தப்பட்ட பிரீமியத்தை, வரிச் சட்டம் 80C பிரிவின் படி, வரிக் கட்டணமாகப் பயன்படுத்தியிருந்தால், காப்பீடு எடுத்தவர் செலுத்த வேண்டிய பிரீமியம் குறையும். கூடுதல் அடிப்படையில் செலுத்த வேண்டிய பிரீமியத்திலிருந்து சம்பாதித்த வட்டி, வரிக்குப் பிந்தைய ஈட்டுத்தொகை என அழைக்கப்படுகிறது.